எந்த துன்பம் கண்டும் அஞ்சாதே!
ஜூன் 14,2008,
11:20  IST
எழுத்தின் அளவு:

சின்னஞ்சிறு குழந்தையே! நீ எப்போதும் ஓடியாடி மகிழ்ச்சியோடு விளையாடி மகிழ்வாய். ஒரு பொழுதும் ஓய்ந்து சோம்பித் திரியாதே. மற்ற குழந்தைகளிடம் கூடி விளையாடிட கற்றுக் கொள். உன்னுடன் பழகிடும் எந்த நண்பரையும், தோழியையும் சுடுசொற்களால் திட்டும் பழக்கமிருந்தால் அதை அடியோடு விட்டு விடு.
நீ பார்க்கும் ஒவ்வொன்றிலும் பாடம் கற்றுக் கொள். குருவியைப் போல் திரிந்து விளையாடு. வண்ணப் பறவைகளைக் கண்டு மனமகிழ்ச்சி கொள். கோழி, காகம் ஆகியவற்றுக்கு இரக்கத்துடன் உணவிட்டு அன்பு செய். பால் தரும் பசு நமக்காக தன் வாழ்வினைத் தருவதை உணர்வாய். நன்றியுள்ள நாய் நமக்கு உற்ற தோழனாகும். பொய் சொல்லுவதால் கேடு பல உண்டாகும். அந்த பழக்கத்தை விட்டு விடு. யார் ஒருவரையும் அவர் இல்லாத போது இழிவாகப் பேசாதே. இப்படி புறம் பேசுதல் நல்லவர்க்கு அடையாளமாகாது. எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் நீ அஞ்சாதே. நல்லவனுக்குத் தெய்வம் உறுதுணையாக இருக்கும். ஒரு நாளும் நமக்கு தீங்குண்டாகாது. எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செய்ய கற்றுக் கொள். உண்மையன்றி வேறு தெய்வமில்லை. நெஞ் சம் வைரம் போன்று உறுதியுடையதாக இருக்க வேண் டும். இதுவே வாழும் முறையாகும்.

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement