நமக்குத் தேவை பொறுமை
ஏப்ரல் 20,2011,
13:04  IST
எழுத்தின் அளவு:

* இறைவனுக்கு அடிபணியுங்கள், மேலும், நற்பணியாற்றுங்கள், (இதன் மூலமே) நீங்கள் வெற்றியடையக்கூடும்.* இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையைக் கைக் கொள்வீர்களாக! உறுதியாக நிலைத்து நிற்பீர்களாக! எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருப்பீர்களாக! மேலும் இறைவனுக்கு அஞ்சியே வாழ்வீராக! (இதனால்) நீங்கள் வெற்றியாளர்களாய்த் திகழக் கூடும்.* இறைவழியில், (உழைக்கும் போது) ஏற்படும் துன்பங்களினால் அவர்கள் மனம் தளர்ந்து விடவில்லை; ஊக்கம் குன்றிவிடவில்லை. (அசத்தியத்திற்கு முன்) அவர்கள் பணிந்திடவுமில்லை. நிலைகுலையாத இத்தகைய பொறுமையாளர்களையே இறைவன் நேசிக்கிறான்.* உங்களுக்கு என்னிடமிருந்து நேர்வழி கிடைக்கும் போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.* இறைவன் அனைவருக்கும் நெருக்கமானவன். எனவே எவர் பரிந்துரையுமின்றி அவனை நேராக நெருங்க முடியும். அவனிடம் உதவி கோர முடியும்.- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement