சிறந்த எண்ணம் வேண்டும்
ஏப்ரல் 20,2011,
13:04  IST
எழுத்தின் அளவு:

* துணிவும் உறுதியும் தரக்கூடிய உயர்ந்த சிந்தனைகளால் அறிவை நிரப்பிக்கொண்டு தினமும் தியானிக்க வேண்டும்.* அன்பு பெருகிவிட்டால் சண்டைகளும், பிறர் உரிமையைப் பறித்தலும், பிறரைச் சுரண்டி வாழ்தலும் மறைந்துவிடும்.* பிறர்சொத்தை அபகரிக்க வேண்டும் என்று மனதில் நினைத்த உடனேயே ஒருவன் திருடனாகி விடுகிறான். திருடனுக்குரிய தண்டனை அவனுக்கு மனிதர்களால் விதிக்கப்படாவிட்டாலும் கடவுளால் அவசியம் விதிக்கப்படும்.* வாழ்வில் ஒருவன் வெற்றி பெற வேண்டுமானால் அவன் சம்பாதிக்க வேண்டிய குணங்களில் மிக உயர்ந்தது பொறுமை.* சுத்தமான, பயமற்ற, சிறந்த எண்ணங்களை வளர்த்தால் இந்தப்பிறவியிலேயே தெய்வத்தன்மையை அடைய முடியும்.* பக்தி இருந்தால் மனதில் தைரியம் உண்டாகும். தைரியம் இருந்தால் உண்மையான பக்தி ஏற்படும். * உலகத்திலுள்ள பொருள்கள் மீதுள்ள ஆசையை நாம் துறந்துவிட்டால் அவை நமக்கு வசப்படுகின்றன. ஆசை இருக்கும் வரை அவற்றுக்கு நாம் அடிமையாக இருப்போம்- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement