கடவுளுடன் இருப்போம்
ஏப்ரல் 20,2011,
13:04  IST
எழுத்தின் அளவு:

* நம்பிக்கை இல்லாத தீய உள்ளம் கடவுளை விட்டு விலகும் தன்மை கொண்டது. எனவே, தீய உள்ளம் எவருக்கும் ஏற்படாதபடி இறையுணர்வுடன் நடக்க வேண்டும்.* கடவுளுக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து, கடவுளின் பணியை இன்னும் அதிகமாக செய்யுங்கள்.* முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.* "எப்போதும் நாம் கடவுளோடு இருப்போம்'. இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள்.* நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாகவும், தீமை என்றால் என்ன என்றே தெரியாதவர்களாகவும் சமுதாயத்தில் இருக்க வேண்டும்.* அழிந்து போகும் உணவுக்காக உழைக்காமல், நிலைத்த வாழ்வு தரும் பக்தி என்ற அழியாத உணவுக்காகவே உழைக்க வேண்டும்.* மனவலிமை கொண்ட நாம் வலுவற்றவர்களின் குறைபாடுகளைத் தாங்கிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.- பைபிள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement