ஆன்மிக எழுச்சி ஏற்படட்டும்!
ஏப்ரல் 25,2011,
11:04  IST
எழுத்தின் அளவு:

* அன்பு, இரக்கம் இவற்றை செயல்படுத்த வாய்ப்பு அளித்த இறைவனை துதிப்பதுடன், உதவி செய்தவர்களை
இறைவனாக எண்ண வேண்டும்.
* இரக்கமுள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகியவை நமக்குத் தேவை.
* மனிதப்பிறவி ஞானமும் பக்தியும் அடைவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதால், ஆன்மிக பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெறப்போகிறது.
* உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகாமல், தைரியத்துடன்
வீரனாகத் திகழ வேண்டும்.
* இந்தியாவில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால் முதலில் ஆன்மிக எழுச்சி உண்டாக வேண்டும். அரசியல் கருத்துக்களை பரப்புவதற்கு முன்னால், நாட்டை ஆன்மிக வெள்ளத்தில் மூழ்கடிக்க வேண்டும்.
* தன்னலம் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.
* பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும், முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வரும்.
- விவேகானந்தர்

Advertisement
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement