குடும்பத்துக்காக செலவிடுங்கள்
ஏப்ரல் 25,2011,
12:04  IST
எழுத்தின் அளவு:

* இறை நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படும் ஒவ்வொரு நற்செயலும் வணக்கமே! தொழுகையும், நோன்பும் வணக்கமே! இல்லற வாழ்வும், வணிகமும், சமூக சேவை ஆகியனவும் வணக்கமே! வாழ்க்கையே வணக்கம்! வணக்கமே வாழ்க்கை!
* கதிரவன் எழும் ஒவ்வொரு நாளிலும் உடம்பின் ஒவ்வொரு பாகமும் ஓர் அறத்தைச் செய்ய வேண்டும். இருவருக்கிடையில் நீதியுடன் நடந்து கொள்வதும் அறமே! ஒருவருக்கு வாகனத்தை கொடுத்து உதவுவதும், வாகனத்தில் ஏற உதவுவதும், சரக்குகளை வாகனத்தில் ஏற்ற உதவுவதும் ஓர் அறமே! ஒரு நற்சொல் மொழிவதும் அறமே! தொழுகையை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஒவ்வோர் அடியும் அறமே! பாதைகளில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவதும் அறமே!
* இறைதிருப்தியைப் பெறும் நோக்குடன் மனிதன் தன் குடும்பத்தாருக்கு செலவிடுவதையும் ஓர் அறச்செயலாகவே இறைவன் காண்கின்றான்.
* அளவில் சிறிதாக இருப்பினும் தொடர்ந்து நிலையாகச் செய்யும் செயல்களையே இறைவன் நேசிக்கின்றான்.
- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement