தெய்வத்தை முழுமையாக நம்பு
ஏப்ரல் 25,2011,
12:04  IST
எழுத்தின் அளவு:

* தெய்வத்தின் விருப்பப்படி உலகம் நடக்கிறது. தெய்வமே சரணம் என்று நம்பி எவன் தொழில் செய்கிறானோ, அவன் என்ன தொழில் செய்தாலும் அது நிச்சயமாக வெற்றி பெறும்.
* உள்ளத்தை தெய்வத்துக்கு பலியாகக் கொடுப்பதே யாகம். அவ்வாறு யாகம் செய்பவருக்கு வலிமை, விடுதலை, செல்வம், ஆயுள், புகழ் ஆகிய மேன்மைகள் கிடைக்கும்.
* மண்ணும், காற்றும், சூரியனும், சந்திரனும் உன்னையும், என்னையும் சூழ்ந்து நிற்கும் உயிர்களும், நீயும் நானும் தெய்வமென்று வேதம் கூறுகிறது, இவை தான் தெய்வம். இதனைத் தவிர வேறு தெய்வமில்லை.
* தெய்வம் உண்டு என்பது அறிவுமயம். அந்த அறிவுக்கடலில் "நான்' என்பது ஒரு திவலை. அதற்கும் எனக்கும் ஒரு குழாய் வைத்திருக்கிறது. அந்தக்குழாயை அகங்காரம் என்ற மாசு மூடியிருக்கிறது. இந்த அகங்காரத்தை நீக்கிவிட்டால் தெய்வ சக்தியும், தெய்வ ஞானமும் உண்டாகும்.
* தெய்வத்தை முழுவதுமாக நம்பி, உண்மை பேசுவதுடன் நியாயத்தையே எப்போதும் செய்தால் தானாக இன்பங்களை பெறலாம்.
- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement