அனைவரையும் நேசியுங்கள்
மே 03,2011,
09:05  IST
எழுத்தின் அளவு:

* சொர்க்கத்தை தேடி போக வேண்டியதில்லை, கட்டுப்பாடான வாழ்க்கை, நல்லொழுக்கம், பிறரிடம் காட்டும் அன்பு, உதவ முடியாத ஜீவன்களிடம் காட்டும் இரக்கம் இவற்றால் நம்முடைய மனதுக்குக் கிடைக்கும் மனநிறைவே சொர்க்கம்.
* அன்பை அடிப்படையாகக் கொண்டு அனைவரையும் நேசித்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.
* இதயமாகிய வயலில் அன்பு என்ற நாற்றை நட்டு, வெறுப்பு என்ற களையை நீக்கி, தொண்டு என்னும் நீரைப் பாய்ச்சினால், இன்பம் என்னும் விளைச்சலைக் காணலாம்.
* பொறுமை, மன்னிக்கும் மனப்பான்மை, கட்டுப்பாடு, திருடாமை, தூய்மை, புலன்களின் மேல் ஆதிக்கம், திறமை, அறிவு, உண்மை, கோபமின்மை இந்தப் பத்தும் தர்மத்தின் குணநலன்களாகும்.
* கண்கள் இரண்டானாலும் பார்க்கும் தொழிலை மட்டும் செய்கிறது, காதுகள் இரண்டாயினும் கேட்கும் தொழிலை மட்டும் செய்கிறது, வாய் ஒன்றாக இருந்தாலும் சாப்பிடுவது, பேசுவது ஆகிய இரு தொழில்களை செய்கிறது. நல்வாழ்க்கைக்கு அதை அடக்கி வைக்க வேண்டும்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement