நல்லதைச் செய்யும் நாளே நல்லநாள்
ஜூலை 29,2008,
16:06  IST
எழுத்தின் அளவு:

ஞானியரின் ஒரே மொழி அமைதி. பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்க பழகிக் கொள்ள வேண்டும். இப்பழக்கம் ஒருவருக்குப் பலவழிகளில் உதவும். கால் தடுக்கிய காயம் ஆறிவிடும். ஆனால், நாக்குத்தவறியதால் உண்டாகும் பழிச் சொற்கள் வாழ்நாள் முழுவதும் நிலைத்துவிடும்.
*நாக்கால் பொய் பேசுதல், புறங்கூறுதல், அளவுக்கு அதிகமாகப் பேசுதல், குற்றமுடையவற்றைப் பேசுதல் ஆகிய குற்றங்களைச்செய்யக்கூடாது.
* பிறரை விமர்சிப்பது, குற்றம் காண்பது ஆகியவை " தான்' எனும் அகம்பாவத்தினால் உண்டாவதாகும். இதற்குப் பதிலாக உங்கள் குற்றங்களை மனக்கண் முன் பரிசீலனை செய்யுங்கள். இந்த எண்ணத்தால் நம்மைத் திருத்திக் கொள்ள முடியும்.
* இறைவனின் திருவடிகளைப் போற்றுதல், பசித்தவர்களுக்குப் உணவிடுதல், நல்லவர்களை சந்தித்து நல்ல விஷயங்களை அறிந்து கொள்ளுதல் போன்ற செயல்களைச் செய்யும் நாட்களே பயனுள்ளவையாகும்.
* கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய உறுப்புக்களே துணையாகவும், தொல்லையாகவும் அமைந்துள்ளன. இந்த உறுப்புகளுக்கு அடிமையாகும் மனிதனுக்கு வேறு பகைவர்கள் தேவையில்லை. ஆனால், இந்த உறுப்புகளை அடக்கியாளக் கற்றுக் கொண்டால் அவை உதவி செய்யும் நண்பர்களாக மாறி விடும்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement