E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மூச்சுக்கு மூச்சு இறைசிந்தனை
மே 08,2011,
16:05  IST
எழுத்தின் அளவு:

* நல்லதையே கேள், நல்லதையே பார், நல்லதையே செய், நல்லதையே நினை, அப்போது கடவுளின் அருள் கிடைக்கும். அனைத்து கெட்ட எண்ணங்களும் மறைந்து விடும்.
* எள்ளில் எண்ணெய் போலவும், பாலில் வெண்ணெய் போலவும் இறைவன் அனைத்துப் பொருள்களிலும் கலந்துள்ளான்.
* தாய் தனது குழந்தையை விடாமல் கண்காணிக்கிறாள். இறைவனுக்கு நாம் தளிர்நடை பயிலும் குழந்தைகள் தான்.
* தாய்ப்பால் உண்ண குழந்தைக்கு நேரம் காலம் தேவையில்லை, அதேபோல் இறைவனை வணங்கவும் நேரம் காலம் தேவையில்லை.
* ஒவ்வொரு முறை மூச்சு விடும்போதும் இறைவனை நினைக்கப் பழகினால், இறுதி மூச்சு விடும் போதும் நினைத்துக் கொண்டே விட முடியும்.
* உடலில் வலி ஏற்பட்டால் "ஐயோ!' என்று பிதற்றிக் கொண்டு ஆறுதல் அடைகிறோம், அதுபோல் வாழ்வில் துன்பம் ஏற்பட்டால் இறைவன் பெயரைக் கூறினால் ஆறுதல் கிடைக்கும்.
* அடுத்தவர் இன்பத்தில் நாம் மகிழ்ந்து, மற்றவர் துன்பத்தில் நாம் நெகிழ்ந்து ஏகமாக விளங்குவதே இறைவன் அருளைப் பெறும் வழி.
- சாய்பாபா

சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement