சமாதானத்தை பின்பற்றுவோம்
மே 08,2011,
16:05  IST
எழுத்தின் அளவு:

* வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே! திண்ணமாக, இவற்றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறைய சான்றுகள் உள்ளன.
* பூமியில் சுற்றித்திரிந்து பாருங்கள்; எவ்வாறு அவன் முதன் முறையாகப் படைத்துள்ளான் என்று! பின்னர், இறைவன் இன்னொரு தடவையும் (மறுமையில்) வாழ்வை நல்குவான். திண்ணமாக, இறைவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன்.
* இறைநம்பிக்கையாளர்கள் ஒருவர் மற்றொருவர்க்கு சகோதரர் ஆவார். உங்கள் சகோதரர்களுக்கு இடையில் தொடர்புகளை சீர்படுத்துங்கள்.
* இறைநம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தங்களுக்குள் போரிட நேர்ந்தால் அவர்களிடையே சமாதானம் செய்துவையுங்கள். பிறகு, அவர்களின் ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரிடம் வரம்பு மீறி நடந்து கொண்டால், வரம்பு மீறிய குழுவினருடன் அவர்கள், இறைவனின் கட்டளையின்படி திரும்பும் வரை போர் புரியுங்கள். அப்படி அவர்கள் திரும்பி விட்டால், அவர்களிடையே நீதியுடன் சமாதானம் செய்து வையுங்கள்.
-வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement