வறுமை நீங்கி வளம் பெறுவோம்
ஜூலை 30,2008,
09:01  IST
எழுத்தின் அளவு:

மாதவன் போற்றும் அருட்சக்தியாம் திருமகள் என்னும் தேவியை வாழ்த்துவோம். தாமரை மலரில் வளரும் மணியாம் தேவியைப் போற்றி வணங்குவோம். அம்மா! வறுமைத்துயரெல்லாம் போதும். வேதனையும், வறுமையும் தீர உன் இணையடிகளைச் சரணடைகிறோம். பாற்கடலில் பிறந்தவளே! அமுதினைப் போன்றவளே! செந்தாமரை மலரில் அமர்ந்தவளே! நான்கு கரங்களிலும் செல்வத்தினை ஏந்தியிருப்பவளே! வேல் போன்ற விழிகளைக் கொண்டவளே! சிவந்த திருமேனியை உடையவளே! உனக்கு என் நமஸ்காரம். நாராயணரின் மார்பில் வீற்றிருப்பவளே! மங்கலத் தோரணத்திலும், பசுமாட்டுக் கொட்டிலிலும், சுடர்மணி மாடத்துவிளக்கிலும், வெற்றி வீரர்களின் தோள்களிலும், உழைப்பாளர் ஈடுபடும் நல்ல தொழில்களிலும் அருளாட்சி செய்கின்றாய். பொன்னிலும், நவமணிகளிலும், நறுமணம் மிக்க மலர்களிலும், சந்தனத்திலும், விளக்கிலும், கன்னியர் கொஞ்சும் சிரிப்பினிலும், செழுமையான காட்டிலும், நறும் பொழிலும், பசுமையான வயல்வெளியிலும் வாழ்ந்திடும்
திருமகளே! உன்னை புகழ்ந்து பாடி பாதமலரைச் சரண்புகுந்து நல்ல வாழ்வினைப் பெறுவோம். வறுமை நீங்கி வளம் பெறுவோம்.

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement