ஊக்கத்துடன் முயற்சி செய்
மே 19,2011,
10:05  IST
எழுத்தின் அளவு:

* வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால் அவன் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் அனைத்திலும் மிக உயர்ந்த குணம் பொறுமையாகும்.
* சமுதாயத்தில் ஏழ்மையிலும், அறியாமையிலும் மூழ்கிக் கிடப்பதைப் பார்த்துவிட்டு சும்மா இருப்பது
மடமையிலும் மடமையாகும்.
* தெய்வத்தை நம்பிவிட்டு நாம் எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால் தெய்வமும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கும். எனவே எந்த செயலிலும் ஊக்கத்துடன் முயற்சித்தால் தெய்வம் வெற்றிக்கான வழியை காட்டும்.
* மனிதன் தன் உள்ளத்தை தெய்வத்துக்கு அர்ப்பணம் செய்வதே யாகம். அந்த யாகத்தை நடத்துபவருக்கு வலிமை, செல்வம், ஆயுள், புகழ் உள்ளிட்ட மேன்மைகள் கிடைக்கும்.
* அனைத்தும் கடவுள்மயம் என்று உணர்ந்தவன் உலகத்தில் எதற்கும், எங்கும் பயப்படமாட்டான். எக்காலத்திலும் மாறாத ஆனந்தத்துடனும் தேவர்களைப் போலவும் நீடுழி வாழ்வான்.
* நமக்கு இந்த உலகில் தேவையானது நீண்ட வயது, நோயில்லாமை, அறிவு, செல்வம். இவற்றைப் பெற தங்கள் குலதெய்வத்திடம் முறையிடலாம்.
- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement