உயிரையும் விட தயங்காதே
மே 19,2011,
10:05  IST
எழுத்தின் அளவு:

* முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி பிறகு உனக்குத் தானாக வந்து சேரும்.
* தைரியமும் சிறப்பும் பெருமளவில் பெற்றிருப்பவர்கள், பலரின் நன்மைக்காகவும் சுகத்திற்காகவும் தங்களையே தியாகம் செய்ய வேண்டும்.
* தூய்மையும், வலிமையும் உள்ளவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமானவன்.
* உற்சாகத்துடன் இருக்கத் தொடங்குவதுதான் நீ ஆன்மிக வாழ்க்கை வாழ ஆரம்பிப்பதற்கான முதல் அறிகுறியாகும்.
* லட்சியத்திற்காக உன் உயிரையும் அர்ப்பணிக்கக் கூடியவனாக இருந்தால் தான் நீ ஒரு தலைவனாக இருக்க முடியும்.
* அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் ஏற்படும்போது உள்ளம் சொல்வதையே பின்பற்றுங்கள். காரணம் அறிவாற்றலால் செல்ல முடியாத உயர்ந்த மனநிலைக்கு, இதயம் ஒருவனை அழைத்து செல்லும்.
* அமைதியையும் ஆசிகளையும் தன்னுடன் கொண்டு வராத அன்புச் செயல்கள் உலகத்தில் எதுவுமே இல்லை என்பதால் அமைதியும், ஆசிகளையும் வாழ்க்கையில் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement