தீமை நன்மையாக என்ன வழி?
மே 26,2011,
09:05  IST
எழுத்தின் அளவு:

* சேமிப்பில் நிர்ணயிக்கப்பட்ட ஒரு பகுதியை தான தர்மமாக கட்டாயம் வழங்க வேண்டும். ""ஜகாத்'' என்று அழைக்கப்படும் இக்கடமை தொழுகைக்கு அடுத்த கடமையாகும்.
* பிறப்பில் அனைவரும் தூய்மையானவர்களே! ஒருவர் செய்யும் பாவமே அவரைக் களங்கப்படுத்துகிறது. அக்களங்கத்தை அவரே போக்க வேண்டும்.
* எவரெவர் எதைச் சம்பாதிக்கிறார்களோ அதற்கு அவரவரே பொறுப்பாளிகளாவர். மேலும் ஒருவரின் சுமையை மற்றவர்கள் சுமக்க மாட்டார்கள்.
* எவர் பாவ மன்னிப்புக் கோரி, மேலும் நம்பிக்கை கொண்டு நற்செயலும் புரியத் தொடங்கி விட்டிருக்கிறாரோ, அத்தகையோரின் தீமைகளை இறைவன் நன்மைகளாக மாற்றிவிடுவான்.
* இறைவன் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக சிரமப்படுத்துவதில்லை. சிரமத்திற்குப் பின்னர் இலகுவை இறைவன் உண்டாக்குவான். உண்மையில் சிரமத்துடன் இலகுவும் இருக்கிறது.
* எந்தப்பொருளில் மானக்கேடான தன்மை பொதிந்துள்ளதோ அது அதனைப் பாழ்படுத்தி விடுகின்றது. எந்தப் பொருளில் நாணம் உள்ளதோ அது அதனை ஒளிரச் செய்கிறது.
-வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement