சூரிய நமஸ்காரம் செய்வோம்!
ஜூலை 31,2008,
16:50  IST
எழுத்தின் அளவு:

முனிவர்களும், புலவர்களும் உமது பெருமையைப் பெரிதென்று போற்றுகின்றனர். அப்பெருமையைக்கொண்ட சூரியதேவனே! உம்மை வாழ்த்துகின்றேன். பரிதியே! யாவற்றுள்ளும் முதல் பொருளாகத் திகழ்பவனே! பானு என்ற பெயர் கொண்டவனே! பொன் போல் நல்லொளியினை திரளாகப் பிரகாசிப்பவனே! உன்னை வணங்குகின்றேன். கதிரொளி தரும் உன் முகத்தினை சற்றே காட்டுவாயாக! வேதமொழிகள் உன்னைப் புகழும் புகழினைக் கண்டு நானும் வேள்விப்பாடல்களை பாடுவதற்கு ஆவல் கொண்டேன். நீ உதிக்கும் வேளையில் நாதத்தினை எழுப்பும் கடலின் இனிய ஒலியோடு நல்ல தமிழில் சொல்லில் இசைப்பாடல்களைச் சேர்ப்பேன். கீழ்வானில் படரும் வான் ஒளி இன்பத்தைக் கண்டு, பறவைகள் பாட்டுப்பாடி மகிழும். விழியினைப் போல சுடர்முகம் கொண்ட உன் வடிவம் கண்டு கடலின் ஒவ்வொரு துளியும் சுருதி பாடி புகழ் சேர்க்கும். என் உள்ளம் கடலினைப் போல் உன் இணையடியின் கீழே நின்று வணங்கும். உலகில் ஒவ்வோர் அணுவும் உந்தன் ஜோதியால் நிறைந்து நல்வாழ்வு பெறும். வானிலே நிலைபெற்று உலகமெல்லாம் வாழ்விக்கும் ஒளி தரும் தேவா! உன்னை ஆயிரம் முறை அஞ்சலி செய்வேன்.

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement