குறுக்குவழி பணம் ஆபத்து
மே 31,2011,
10:05  IST
எழுத்தின் அளவு:

* சொர்க்கத்தை தேடிப்போக வேண்டியதில்லை, கட்டுப்பாடான வாழ்க்கை, நல்லொழுக்கம், பிறரிடம் காட்டும் அன்பு, நமக்கு உதவ முடியாத உயிர்களிடம் காட்டும் இரக்கம் இவற்றினால் நம்முடைய மனதுக்கு கிடைக்கும் மனநிறைவே சொர்கம்.
* குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் அது நிலைக்காது. கடைசியில் அவமானத்திலும், அவப்பெயரிலும் தான் கொண்டு போய்விடும். தர்மப்படி சம்பாதிப்பவனே உயர்வடைகிறான்.
* நமக்கு எது வேண்டுமோ அதை இறைவனிடம் கேட்பதில் தவறில்லை. இறைவன் உங்களுடைய தகுதிக்கு ஏற்பக் கொடுத்தருள்வான், ஆனால், ""எனக்கு எல்லாம் நீயே; உன்னையே எனக்குக் கொடு'' என்று வேண்டிக் கொள்ளும் பக்தி மார்க்கம் தான் அனைத்தையும் விடச் சிறந்தது.
* இதயத்தில் தெய்வம் இருப்பதால் இதயமே தெய்வத்தின் கோயிலாகும். அந்த இதயத்தை தயை (இரக்கம்) மூலம் நிரப்ப வேண்டும்.
* பொறுமையே அனைத்துலகிற்கும் பொதுவானது. பொறுமை, சகிப்புத்தன்மை இவற்றிற்கு மிஞ்சிய தெய்வம் உலகத்தில் வேறு எதுவும் இல்லை.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement