இன்றே செய் நன்றே செய்
மே 31,2011,
10:05  IST
எழுத்தின் அளவு:

* மண்ணும், காற்றும், சூரியனும், சந்திரனும், உன்னையும், என்னையும் சூழ்ந்து நிற்கும் உயிர்களும், நீயும் நானும் தெய்வமென்று வேதம் கூறுகிறது.
* தன்னை மறப்பதுடன், தெய்வத்தை முழுமையாக நம்பி, உண்மை பேசி, நியாயத்தையே எப்போதும் செய்தால் அனைத்து இன்பங்களும் நம்மை தேடி வரும்.
* தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிப்பது பாவம். தனக்கும், பிறர்க்கும் இன்பம் விளைவிப்பதே புண்ணியம்.
* அனைத்து செயல்களையும் "நாளை, நாளை' என்று நாட்களை கடத்தாமல், இன்றே செய்தால் அது நன்றே முடியும்.
* பிறருடைய சொத்தை அபகரிக்க வேண்டும் என்று மனதில் ஒருவன் எண்ணினாலே திருடனாகி விடுகிறான். திருடனுக்குரிய தண்டனை அவனுக்கு மனிதர்களால் விதிக்கப்படாவிட்டாலும், கடவுளால் அவசியம் விதிக்கப்படுகிறது.
* வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால் அவன் பொறுமை மிக்கவனாக இருக்க வேண்டும்.
- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement