சக்தியை வழிபட பயம் நீங்கும்
ஆகஸ்ட் 01,2008,
07:51  IST
எழுத்தின் அளவு:

உலகத்தின் நாயகியாக வீற்றிருப்பவளே முத்துமாரியம்மா! உன் பாதங்களை சரணமாகப் பற்றுகின்றோம். கலகம் செய்யும் அரக்கர் பலர் எங்கள் கருத்திலே புகுந்து விட்டார். உன் திருவடிகளே எமக்கு என்றும் நிலைபேறு தரும் என்று எண்ணி சரணடைந்து விட்டோம் தாயே!ண துணிகளை வெளுக்க உவர் மண்ணுண்டு. தோல் வெளுக்க சாம்பலுண்டு. நவரத்தின மணிகளைக் கடைய சாணையுண்டு. ஆனால், மக்கள் மனம் வெளுக்க வழியில்லையே அம்மா! எங்கள் பிணிகளைத் தீர்க்க மாற்றுண்டு. ஆனால், எங்கள் ஏற்றத் தாழ்வைப் போக்க வழியில்லையே தாயே! மனத்தூய்மை தந்து, ஏற்றத்தாழ்வை நீக்கி, அறிவு தெளிவாவதற்காக உன்னையே அடைக்கலம் என தஞ்சம் புகுந்தோம் அம்மா!
 தேடி உன்னையே சரண் புகுந்தோம் தேசமுத்துமாரியம்மா! ஒப்பில்லாதவளே! உன் திருவடிகளுக்கே ஏவல்பணி செய்து உன் அருளால் நல்வாழ்வு பெறுவேன். சக்தி என்ற திருநாமத்தைப் பாடி பக்திப்பரவசத்துடன் போற்றி வழிபட்டால் மனபயம் அனைத்தும் நீங்கிவிடும்.ண உலகத்திற்கு ஆதாரம் சக்தி என்று அருமறைகள் கூறுகின்றன. எந்த தொழில் புரிந்தாலும் எல்லாமே அன்னையின் தொழில்களே. இன்பத்தை வேண்டி நின்றால் அவள் மகிழ்ச்சியுடன் நமக்கு அருள்புரிவாள். தன்னை நம்பியவர்களுக்கு வரங்கள் பல தருவாள்.

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement