நரைத்தாலும் விடாத ஆசை!
ஆகஸ்ட் 01,2008,
08:15  IST
எழுத்தின் அளவு:

காலம் விரைந்து ஓடுகிறது.பேச்சு, பொருள் தேடுதல், குடும்பப்பராமரிப்பு என்று பகல்நேரமும், உறக்கத்திலும், இன்பநாட்டங்களிலும் இரவுநேரமும் செல்கிறது. நாட்களும் வாரங்களும் மாதங்களும் வருடங்களுமாக நம் வாழ்நாள் மிக வேகமாக நகர்கிறது. ரோமங்கள் நரைத்து விடும். பற்கள் விழுந்து விடும். நம் இயலாமையை சிறிது சிறிதாக உணரவும் செய்கிறோம். ஆனாலும், அழியும் பொருள் களின் மீதுள்ள பற்றுதல் மட்டும் தொலைவதில்லை. சந்தோஷத்தைத் தாங்கி வரும் அனைத்திலும் முடிவில் துன்பமே வந்து சேர்கிறது. அழகும், குரூரமும் கலந்தே இருக்கின்றது. இரக்கமும் கொடுமையும் கலந்தே காட்சியளிக்கிறது. இந்த உலகில் நம்பி நிற்பதற்குரிய ஒரே ஆதாரம் இறைவன் மட்டுமே. உலக ஆசைகளில் ஈடுபட்டவர்களின் நிலை குடிகாரர்களைப் போன்றது. எது நல்லது எது கெட்டது என்ற பகுத்தறிய முடியாமல் மயக்கநிலையில் நாம் புலன்களின் இச்சைகளில் சிக்குண்டு கிடக்கிறோம். ஆகாயத்தில் ஒலிபரப்பப்படும் கம்பியில்லா தந்தியைப் போன்று பகைமை, பொறாமை, வெறுப்பு இவ்வெண்ணங்கள் அருகில் உள்ளவர்களை மட்டுமில்லாது தூரத்தில் உள்ளவர்களுக்கும் அபாயம் விளைவிக்க வல்லவை.

Advertisement
சிவானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement