யார் புண்ணியவான்?
ஜூன் 05,2011,
11:06  IST
எழுத்தின் அளவு:

* உனது நடையில் மிதமான நிலையை மேற்கொள். உனது குரலை சற்றுத் தாழ்த்தி கொள். திண்ணமாக அனைத்து
குரல்களிலும் மிகவும் அருவருப்பானது கழுதையின் குரலாகும்.
* (இறைவனின் அடியார்கள்) செலவு செய்யும் போது வீண் விரயமும், கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக, அவர்களுடைய செலவு இந்த மித மிஞ்சிய இரு நிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும்.
* நாணமும், பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவதும் இறை நம்பிக்கையின் பகுதிகளாகும்.
* அளவில் சிறிதாக இருப்பினும் தொடர்ந்து நிலையாகச் செய்யும் செயல்களையே இறைவன் நேசிக்கின்றான்.
* வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்கள் புண்ணியவான்கள் ஆவர்!
* இறைவன் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக சிரமப்படுத்துவதில்லை... சிரமத்திற்குப் பின்னர் இலகுவை இறைவன் உண்டாக்குவான்... உண்மையில் சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது.
-வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement