எல்லாம் விளையாட்டே!
ஆகஸ்ட் 01,2008,
08:21  IST
எழுத்தின் அளவு:

* இன்பம் துன்பம் இரண்டும் கலந்ததாகவே உலகம் இருக்கிறது. துன்பமில்லா விட்டால் இன்பத்தை ரசிக்கும் தன்மை இல்லாமல் போய் விடும். எல்லா மக்களும் ஒரே நேரத்தில் இன்பத்துடன் இருக்க வேண்டும் என்பது இயலாத ஒன்றாகும். எங்கும் இன்பம் மட்டுமே இருந்தால் இன்பத்திற்கே மதிப்பிருக்காது. மதிப்பில்லாத போது இன்பத்தை பெற விரும்பும் முயற்சியும் இல்லாமல் போய்விடும்.
* இறைவன் ஒருவனே நமக்கு நிரந்தரமான உறவு. மற்ற உறவுகளெல்லாம் நிலையில்லாதவை. இருப்பதுபோலத் தோன்றி பாதியிலேயே மறைந்து விடும். இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமானவர். நாம் அவரைப் புரிந்து கொள்வதில் காட்டும் தீவிர தன்மைக்கு ஏற்பவே அவரை அறிந்து கொள்ள முடியும்.
* வீட்டில் மாலை நேரத்தில் ஓய்வெடுக்கும் போது அன்றைய விஷயங்களை எல்லாம் ஒவ்வொன்றாக நினைவு கூர வேண்டும். குறிப்பாக நம் மனநிலையை ஆய்வு செய்ய வேண்டும். முன்பு எப்படி இருந்தோம் இப்போது எப்படி இருக்கிறோம் என்ற சுயசிந்தனையினால் நம் வாழ்வில் சரியான பாதை எதுவென்ற தெளிவு ஏற்படும்.
* மரணத்தைக் கண்ட மனிதன் அழுகிறான். ஆனால், மகான்கள் மரணத்தைக் கண்டு சிரிப்பார்கள். ஏனெனில் உண்மையை உணர்ந்தவனுக்கு எல்லாம் விளையாட்டே என்பது நன்கு தெரியும்.

Advertisement
சாரதாதேவியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement