பொறுப்பவர் பூமியாள்வார்
ஜூன் 13,2011,
09:06  IST
எழுத்தின் அளவு:

*எப்போதும் இனிமையோடும், புன்னகையோடும் இருப்பது ஒருவனைக் கடவுள் அருகில் கொண்டு செல்லும்.
* மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரினையும் வழிபடுங்கள், இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழி.
* இறைவனின் படைப்பான அனைத்து உயிர்களுக்கும் இரக்கத்துடன் பணி செய்தல் மிக நன்று.
* பூமிதேவியைப் போன்று அனைத்தையும் பொறுப்பவர் ஆக இருக்க வேண்டும். பொறுமையோடு இருந்தால், உலகமே உங்கள் காலடியில் அமரும்.
* கீழ்ப்படிதலை அறிபவனே கட்டளையிடவும் அறிவான்.
* ஒன்றாகக் கூடி வாழ்தலே நமக்கு வேண்டிய ஒன்றாகும். சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமை.
* ரகசியமாகப் பிறரைக் குறை கூறுவது பாவம். முதலில் நீ அதை முழுவதும் நீக்க வேண்டும். மன்னித்து மறந்தால் மகிழ்ச்சி நிலவும்.
* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்குத் தேவையில்லை.

- விவேகானந்தர்

Advertisement
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement