நடிப்புக்காக கூட பொய் பேசாதே!
ஆகஸ்ட் 02,2008,
19:29  IST
எழுத்தின் அளவு:

தாமிரப்பாத்திரத்தை நாள்தோறும் துலக்க வேண்டும். இல்லையேல் அதில் களிம்பு ஏறிவிடும். மனமும் தாமிரம் போன்றது. நாள்தோறும் பிரார்த்தனை, நல்ல எண்ணங்களால் அதை துலக்க வேண்டியது அவசியம். தாய்மீதும், தந்தை மீதும் பக்தியில்லாத ஒருவனுக்கு தெய்வபக்தி ஒருநாளும் வராது. தாயும், தந்தையும் துன்மார்க்கர்களாக இருப்பினும் பிள்ளைகள் அவர்களுக் குத் தொண்டு செய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள். எல்லா மனிதர்களிடத்தும் இறைவன் இருக்கிறான். ஆனால், இறைவனிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. இதுதான் மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள வேறுபாடு.நடிப்பதற்காகக் கூட பொய் பேசுதல், திருடுதல் போன்ற பொருந்தாத செயல்களைச் செய்யக்கூடாது. நடிப்பதே நாளடைவில் நம் மனதைக் கெடுத்துவிடும். பிறரிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ, அதையே பிறருக்குச் செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. நிச்சயம் நாம் நல்லதை மட்டுமே எதிர்பார்ப்போம். அதனால் நாமும் பிறருக்கு நல்லவை மட்டுமே செய்ய வேண்டும். ஒருவனுடைய குணநலன்கள் அவனுடைய சகவாசத்தைப் பொறுத்து அமைகிறது. அதேபோல, தன் குணத்திற்கேற்ற நண்பர்களையே ஒருவன் நாடுகிறான். ஆக குணமும், நட்பும் ஒன்றையொன்று சார்ந்தவையாக இருக்கின்றன.

Advertisement
ராமகிருஷ்ணர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement