பிறரைத் தவறாகப் பேசாதே
ஜூன் 14,2011,
15:06  IST
எழுத்தின் அளவு:

* சொர்க்கத்தை நாம் தேடிப் போக வேண்டியதில்லை, கட்டுப்பாடான வாழ்க்கை, நல்லொழுக்கம், பிறரிடம் காட்டும் அன்பு, உயிர்களிடம் காட்டும் இரக்கம் இவற்றினால் நம்முடைய மனத்துக்கு கிடைக்கும் மனநிறைவே சொர்க்கம்.
* பகவானிடம் மனப்பூர்வமாக நம்மிடமுள்ள அனைத்தையும் சமர்ப்பித்து பிரார்த்திக்க வேண்டும். தண்ணீர் வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் மட்டும் தாகம் தீராது. கையில் தண்ணீரை எடுத்துப் பருகிய பின்னர் தாகம் தீருகிறது.
* பிரம்மாவின் பிரதிபலிப்பே தாய், விஷ்ணுவின் மறுவடிவமே தந்தை. சிவபெருமான் சரியான பாதையில் நம்மை வழி நடத்தும் ஆசிரியர். ஆகையால், மும்மூர்த்திகளும் நம் வாழ்விலேயே உடன் இருக்கின்றனர்.
* பிறரைக் குறித்து தவறாகப் பேசாதே. அவர்களிடம் உள்ள நல்ல பண்புகளை பார். அனைவரும் நல்லவர்கள் தான். உன் கண்களுக்கு அவர்களிடம் உள்ள தீயபண்புகள் தெரிந்தால் அதற்கு உன்னிடமுள்ள தீமை தான் காரணம். உனக்குப் பிடிக்கவில்லையென்றால் அவர்களுடன் பழகாமல் ஒதுங்கிவிடு.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement