பதவியில் இருக்கிறீர்களா?
ஜூன் 14,2011,
15:06  IST
எழுத்தின் அளவு:

* படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும். படைப்புகளுக்கு நன்மை புரிபவரே இறை நேசத்திற்கு உரியவராவர்.
* மண்ணிலுள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான்.
* அன்பு என்பது உங்கள் உறவினர்கள் மீது மட்டும் செலுத்தப்படுவதல்ல. அன்பு அனைவர் மீதும் செலுத்தப்படுவதாகும்.
* தனிமனிதனின் உரிமைகளை பறிக்கக் கூடாது, சமுதாயத்தின் தேவைகளைப் புறக்கணிக்கக் கூடாது, இவ்விரண்டிற்குமிடையில் இணக்கமும் நடுநிலையும் வேண்டும்.
* கொடுமைக்குள்ளானவனின் பிரார்த்தனைக்கு அஞ்சுங்கள், ஏனென்றால் அந்தப் பிரார்த்தனைக்கும் இறைவனுக்குமிடையில் திரை கிடையாது. (இறைவனால் விரைந்து ஏற்றுக் கொள்ளப்படும்)
* நாம் பதவியில் அமர்த்தி இருக்கும் ஒருவர் நம்மிடமிருந்து ஓர் ஊசியை மறைத்தாலும், அல்லது அதனைவிட ஒரு சிறிய பொருளை மறைத்தாலும் அதனை அவர் அபகரித்துக் கொண்டார் என்றே பொருள். மறுமை நாளில் அதனை அவர் சுமந்த வண்ணமே வருவார்.
-வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement