சாப்பிடும் போது பேசாதீர்கள்
ஆகஸ்ட் 02,2008,
19:32  IST
எழுத்தின் அளவு:

இரக்கம், வாய்மை, அன்பு, அடக்கம், பொறுமை, மனஅமைதி போன்ற நற்குணங்கள் நம்மை மேன்மையான நிலைக்கு அழைத்துச் செல்லும் ஏணிப்படிகள்.மேன்மையான எண்ணங்கள் நம்மையும் அறியாமல் நல்ல சூழல்நிலையை நம்மிடத்தில் உருவாக் கும் தன்மையுடையது. நாம் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமானால், நம்முடைய எண்ணங்களை சீர் படுத்துவதில் அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
எந்த நிலையிலும் உண்மையைப் பேச வேண்டும் என்று உறுதியுடையவராய் இருங்கள். உண்மையைத் தானே பேச வேண்டும் என்பதற்காக, எப்போதும் எரிந்து விழுவது கூடாது. பேச்சில் இனிமை இருப்பது அவசியம். இனிமையாகப் பேசும் போது நம்முடன் உடனிருப்பவர்களும் நாமும் மனமகிழ்ச்சியைப் பெறமுடியும்.
எப்போதும் பேசிக் கொண்டே இருப்பது தேவையற்றது. தினமும் இரண்டுமணி நேரமாவது மவுனத்தைக் கடைபிடிக்க வேண்டும். சாப்பிடும் போது சிலர் பேசிக்கொண்டே இருப்பர். இது அறவே தவிர்க்க வேண்டிய ஒன்றாகும்.எது நமக்கு தேவையோ அதை மட்டும் வாங்குவது நல்லது. தேவைகளைக் குறைத்துக் கொள்வது மனஅமைதிக்கு வழி வகுப்பதாகும். இருப்பதை எவ்விதம் நல்லவிதமாக பயன் படுத்த முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

Advertisement
சிவானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement