மனதை விரிவாக்கும் வழி
ஜூன் 20,2011,
13:06  IST
எழுத்தின் அளவு:

* பணம் என்பது செய்த வேலையை அளப்பதற்கான ஒரு கருவியே. அதற்கு வேறு எந்த மதிப்பும் கிடையாது. தேவைக்கு மேல் பணம் தேடி அலைய வேண்டிய அவசியமே இல்லை.
* ஒரு மனிதனிடம் அனைத்துவிதப் பொறுப்புகளையும் கொடுத்து விட்டால், அவனது சுயமதிப்பும் கடவுளிடத்திலுள்ள பயபக்தியும் அவனைச் சீர் செய்து விடுகிறது. அவன் விழிப்படைகிறான்.
* மனிதனுடைய அடிப்படையான பண்பு நன்மை செய்வதே என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
* மனம் விரிவடைய வேண்டுமானால் கல்லூரிகளுக்கும் கலைக்கூடங்களுக்கும் போக வேண்டுமென்பதில்லை. கடினமான அனுபவங்களிலிருந்தே அது உண்டாகும்.
* முக்தி என்பது பிறவியறுத்த நிலை. உடலுக்குள்ள பாசத்தளைகளை அறுத்து இறைவனோடு கலத்தலே முக்தி. முக்தி நிலையே மனித வாழ்வின் லட்சியமாக இருக்க வேண்டும்.
* கவனித்தும், காத்தும், பிரார்த்தித்தும் வருபவர்களுக்கு அனைத்தும் சரியாகவே நடக்கும்.
* நம்மைப் பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று எண்ணுகிறோமோ, அதேபோல் நாம் பிறரையும் நடத்த வேண்டும்.
-காந்திஜி

Advertisement
மகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement