பக்தி என்றால் என்ன?
ஜூன் 20,2011,
13:06  IST
எழுத்தின் அளவு:

* புத்தக அறிவு மட்டும் பயன்தராது. அது மேலோட்டமான அறிவு. ஆழ்ந்த பயன்தரக்கூடிய அறிவைத் தேடுங்கள். அதைக் கொண்டு புத்தியை வளப்படுத்திக் கொள்ளுங்கள்.
* நல்ல எண்ணங்களை வளருங்கள், நல்லதையே பேசுங்கள், நல்ல செயல்களில் ஈடுபடுங்கள், பிறருக்கு உதவுங்கள், எப்போதும் யாரையும் புண்படுத்தாதீர்கள். அதுவே உண்மையான பக்தி. பிறருக்கு உதவாமல் வெறும் தியானம் மட்டும் செய்வதால் மட்டும் இறைவனை அடைய முடியாது.
* மனிதனிடம் உள்ள தெய்வீகம் ஒற்றுமையில் தான் வெளிப்படும். மனித சக்தி ஒற்றுமையில் தெய்வீகச்
சக்தியாகிறது. பிரிவினையில் மிருக சக்தியாகிறது.
* நமக்குக் கிடைப்பதைப் பிறருக்கும் கொடுக்கப் பழக வேண்டும். பிறருக்குக் கொடுக்கவே பகவான் செல்வத்தை கொடுத்திருக்கிறார் என்பதை உணர வேண்டும். தியாக உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். கிடைப்பதைக் கொடுங்கள், கிடைக்காவிட்டால், உங்களுடையதையே கொடுக்க முயலுங்கள். அதுவே தியாக உணர்வு, அதுவே உங்களை மேம்படுத்தும்.
-சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement