இறைவனுக்கே எல்லாம் தெரியும்
ஜூன் 20,2011,
13:06  IST
எழுத்தின் அளவு:

* இறைநம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தங்களுக்குள் போரிட நேர்ந்தால் அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள். பிறகு, அவர்களில் ஒரு குழுவினர், மற்றொரு குழுவினரிடம் வரம்பு மீறி நடந்து கொண்டால், வரம்பு மீறிய குழுவினருடன் அவர்கள் இறைவனின் கட்டளையின் பால் திரும்பும் வரை போர்புரியுங்கள். அப்படி அவர்கள் திரும்பி விட்டால், அவர்களிடையே நீதியுடன் சமாதானம் செய்து வையுங்கள்.
* எந்த மனிதனும், அவன் நாளை என்ன சம்பாதிக்கப் போகின்றான் என்பதை அறிவதில்லை. தான் எந்தப் பூமியில் மரணமடைவோம் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. திண்ணமாக, இறைவன் தான் யாவற்றையும் நன்கு அறிபவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.
* அசத்தியத்தைக் கொண்டு சத்தியத்தைக் குழப்பி விடாதீர்கள். அறிந்து கொண்டே சத்தியத்தை நீங்கள் மூடிமறைக்காதீர்கள்.
* எவர் ஒருவர் எதை சம்பாதிக்கிறாரோ அதற்கு அவரே பொறுப்பாவார். மேலும் ஒருவரின் பாவச்சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார்.
- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement