பயனறிந்து செயலில் இறங்கு!
ஜூன் 20,2011,
13:06  IST
எழுத்தின் அளவு:

* மனஉறுதி, சந்தோஷம், உலகை நடத்தும் சக்தி, நம்பிக்கை, உடல் உழைப்பு முதலிய நற்குணங்களைக் கடைபிடித்து, வாழ்வை உற்சாகமாக நடத்த வேண்டும்.
*தனியிடத்தில் அமர்ந்து உயர்ந்த சிந்தனைகள், அமைதி வழங்கும் சிந்தனைகள், பலம் தரக்கூடிய சிந்தனைகள், துணிவும் உறுதியும் தரக்கூடிய சிந்தனைகள் ஆகியவற்றால் அறிவை நிரப்பி கொண்டு தியானம் செய்யுங்கள்.
* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவன் பிற ஜந்துக்களை திருத்த இறைவனிடம் அதிகாரம் பெறமாட்டான்.
* ஒரு செயலைத் துவங்கும் போது அதனால் என்ன பயன்? அது நமக்கு தேவை தானா? என்பதை ஆராய்ந்து பார்த்து இறங்க வேண்டும். பயன்படாத செயல்களில் இறங்கினால், சங்கீதம் படிக்கப் போன கழுதை போல தொல்லை தான் வந்து சேரும்.
* நல்ல விளக்கு இருந்தாலும் கண் வேண்டும். பெண்களுக்கு நான்கு பேர் துணைக்கு இருந்தாலும் சுயபுத்தி வேண்டும்.
* தன்னைத்தானே வென்றவன் தனக்குத்தானே நண்பனாகிறான். தன்னைத்தானே ஆளாதவன் தனக்குத் தானே பகைவனாகிறான்.
-பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement