கவலையை அவரிடம் விடு!
ஜூன் 20,2011,
13:06  IST
எழுத்தின் அளவு:

* எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறு பெற்றோர். துன்ப நாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார்.
* நாங்கள் கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால் பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க முடிகிறது.
* தொலைவில் இருக்கும் உடன் பிறந்தாரை விட, அண்மையில் இருக்கும் நண்பரே மேல்.
* உன் சகோதரர்கள் ஏழ்மைப்பட்டு இளைத்துப் போனால், அவர்களுக்கு உதவு.
* ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவு அளிப்பார்.
* மனத்தளர்ச்சியுள்ளவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்; வலுவற்றோருக்கு உதவுங்கள்; எல்லோரோடும் பொறுமையாயிருங்கள்.
* அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்! இன்று ஆண்டவர் தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைச் செயலைப் பாருங்கள்.
* ஈகைக் குணமுள்ளோர் வளம்பெற வாழ்வர். குடிநீர் கொடுப்போர் குடிநீர் பெறுவர்.
* வாழ்வளிக்கும் நீரூற்றுகளுக்கு வழி நடத்திச் செல்லும் கடவுள், அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.
- பைபிள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement