அதர்மத்தை அடியோடு அழிப்பவன்
ஆகஸ்ட் 09,2008,
08:37  IST
எழுத்தின் அளவு:

பச்சை திருமயிலில் வரும் வீரன் அவன். கண்களுக்கு அணி செய்யும் அலங்காரன். இளமையும் அழகும் நிறைந்த குமாரன். ஒளி பொருந்திய பன்னிரு தோள்களை கொண்ட வேலன். வண்ணத்தமிழால் பாடும் அன்பர்களுக்கு எளிய சிங்காரன். அவன் திருவடிகளைப் பணிந்திடு மனமே! அவன் உள்ளம் கனிந்து அருள்புரிவான். தேவேந்திரன் மகளான தெய்வானை யை மணந்தான். தெற்குத் தீவினில் சூரபத்மனை வதைத்தான். தமிழ் மக்களுக்கு அவனே தலைவன் ஆனான். என்றும் பாக்கள் பாடும் பாவலர்களுக்கு இன்னருள் செய்பவன் முருகனே. இந்த பாரினில் அறத்தை நிலைநாட்டி அதர்மத்தை அடியோடு அழிப்பவனும் அவனே. முருகா! நீ உறையும் குன்றான சுவாமிமலையில் வந்து நின்று உனக்கு சேவகம் செய்வோம். உனக்கு செய்யும் சேவை கண்டு மகிழ்ந்து, உன் அன்னை பராசக்தி இன்னருளை வாரி வரங்களைத் தருவாள். மயில் மீதினில் வடிவேலினைத் தாங்கி வருவாய் முருகா! நலமும், புகழும், தவமும், தனமும் என எல்லாவையுமே தந்து அருள்புரிவாய். வேதசுருதிகள் உன் புகழையே பாடுகின்றன. அமரலோகம் வாழ்வு பெற சுடர்வேலினை விடுத்த உன் திருவடிகளையே சரணமாகப் பற்றுகின்றோம். எங்கள் குருவாக விளங்கும் உன்னை வணங்கி மகிழ்கிறோம்.

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement