எல்லாம் இறைவன் சேவையே!
ஜூன் 24,2011,
16:06  IST
எழுத்தின் அளவு:

* தனித்து வாழாதீர்கள், ஒதுங்கி இருக்காதீர்கள், மனம் விட்டுப் பழகுங்கள், ஒற்றுமை உணர்வு மலர உதவுங்கள், அனைவரும் சேர்ந்தால் உறவு உறுதியாகும். அனைவரும் பிரிந்தால் அழிவுக்கு வழி பிறக்கும். பரஸ்பர அன்பு மூலம் அனைவரும் ஒன்று சேருங்கள். அது அனைவருக்கும் நல்லது. அன்பின் வடிவமானவர்களே, ஒற்றுமையாக இருங்கள்.
* கடமையைக் கருத்துடன் செய்வதே மனிதரின் பொறுப்பு. அந்தந்த நேரத்தில் செய்ய வேண்டிய
பணிகளை தாமதமின்றி செய்து விடுங்கள். பலன் உறுதி.
* பிறருக்கு நீங்கள் செய்த உதவியையும், பிறர் உங்களுக்கு செய்த தீமையையும் மறந்துவிடுவதே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்லது.
* நாம் எது செய்தாலும், அது இறைவனுக்குச் செய்யும் சேவையே என்று எண்ணித் தொண்டு புரிவதில் ஈடுபடுங்கள்.
* பக்தியைப் பிறர் சொல்லக் கேட்டு உணர முடியாது. நல்ல ஒழுக்கத்தைத் தரும் போதனைகள் மனதில் பதிய வேண்டும். அவை நமது செயலில் பிரதிபலிக்க வேண்டும். புனித எண்ணங்களிலும், தொண்டுகளிலும் மனதை செலுத்த வேண்டும்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement