கருணை செய்வாய் இறைவா!
ஜூன் 30,2011,
10:06  IST
எழுத்தின் அளவு:

* எங்கள் இறைவனே! நாங்கள் தாங்க இயலாத பாரத்தை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்களைப் பொறுத்தருள்வாயாக! எங்களுக்கு மன்னிப்பு வழங்குவாயாக! எங்கள் மீது கருணை பொழிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலனாவாய்!
* எங்கள் இறைவனே! எங்கள் மனைவிமார்களையும், எங்கள் குழந்தைகளையும் எங்கள் கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கக் கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக! மேலும், எங்களை இறையச்சம் உடையோருக்கு முன்னோடிகளாய்த் திகழச் செய்வாயாக!
* (இறைவா!) உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம். எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக! (அவ்வழி!) எவர்களுக்கு நீ அருள்புரிந்தாயோ அவர்களின் வழி; உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறி தவறிப் போகாதவர்களின் வழி.
-வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement