புன்னகையோடு திகழுங்கள்
ஜூன் 30,2011,
10:06  IST
எழுத்தின் அளவு:

* மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபடுங்கள், பகவானை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழி.
* உடல் மற்றும் மனதிலுள்ள குறைகளை நினைத்து துயரப்படுவதால் நமக்கு பயன் எதுவும் கிடைக்காது, அவற்றை ஒரு பொருட்டாக எண்ணாமல் ஊக்கத்தோடு இருப்பதே நன்மை தரும்.
* எதிலும் பரபரப்பு தேவையில்லை, ஆனால், சுறுசுறுப்பு எப்போதும் தேவை. இந்த இரண்டையும் படைக்கலனாகக் கொள்பவர்கள் எந்த தடையையும் எதிர்த்து வெற்றி பெறுவர்.
* மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபடுங்கள், பகவானை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழி.
* இனிமையோடும், புன்னகையோடும் இருப்பது ஒருவனைக் கடவுள் அருகில் கொண்டு செல்லும்.
* வாழ்வில் ஒருவன் விருப்பங்களையும், கோபத்தையும் அடக்கி ஆண்டால் உண்மையான சுதந்திரத்தையும், இன்பத்தையும் அவனால் உணர முடியும்.
- விவேகானந்தர்

Advertisement
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement