நல்லுரைகளைக் கேளுங்கள்
ஜூலை 05,2011,
10:07  IST
எழுத்தின் அளவு:

* பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்; உம்மையே நான் எப்பொழுதும் புகழ்ந்து போற்றுவேன்.
* ஞானமும் அறிவும் உனக்கு அவ்வாறே இனிமையாய் இருக்கும், அவற்றை நீ அடைந்தால் முடிவில் உனக்குப் பயன்கிடைக்கும். உன் நம்பிக்கை வீண்போகாது.
* இறைவன் எத்தனை இனியவர் என்று சுவைத்துப்பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறு பெற்றோர்.
* நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோம்.
* குழந்தைகளே! தந்தையின் போதனைக்குச் செவிசாயுங்கள் மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.
* குழந்தைகளே! நல்லுரை கேட்பதை நிறுத்தாதே; நிறுத்தினால் அறிவு தரும் நன்மொழிகளைப் புறக்கணிக்கிறவன் ஆவாய்.
- பைபிள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement