ஆன்மிக வெள்ளத்தில் மூழ்குவோம்
ஜூலை 11,2011,
08:07  IST
எழுத்தின் அளவு:

* அன்பு இருந்தால் உலகில் முடியாதது ஒன்றுமே கிடையாது. அதேபோல் தன்னலத்தையும் துறந்தால், உங்களை எதிர்க்கும் சக்தி உலகில் ஒன்றுமே இல்லை.
* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்கு தேவையில்லை, அன்பு தான் வாழ்க்கை.
* உள்ளத்தை திறந்து வைத்திருந்தால் உலகிலுள்ள நல்ல நினைவுகள் அனைத்துக்கும் உரிமையுள்ளவர்களாகி விடுவோம்.
* மலைபோன்ற சகிப்புத்தன்மை, இடைவிடாத முயற்சி, எல்லையற்ற பரிசுத்தம், இவை தான் நல்ல செயல்களுக்கான வெற்றியைத் தரும் ரகசியம்.
* நம் தேசத்தின் முன்னேற்றம் ஆன்மிக எழுச்சியால் தான் ஏற்படும் என்பதால் சமுதாயம், அரசியல் கருத்துக்களைப் பரப்புவதற்கு முன்னால் நாட்டை ஆன்மிக வெள்ளத்தில் மூழ்குவியுங்கள்.
* நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய், வலிமை உள்ளவனாக நினைத்தால் வலிமை படைத்தவனாக ஆகிறாய்.
- விவேகானந்தர்

Advertisement
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement