அன்புவழியே நல்வழி
ஜூலை 12,2011,
10:07  IST
எழுத்தின் அளவு:

* பிரார்த்தனை என்பது உதட்டிலிருந்து வராமல், நெஞ்சிலிருந்து வரவேண்டும். அதுவும் தனக்காகச் செய்யாமல் பிறருக்காகச் செய்ய வேண்டும்.
* சாதனை படைப்பதற்காக வேகமாக போவது முக்கியமல்ல. சரியான பாதையில் போவது தான் முக்கியம். அப்போது தான் சேரவேண்டிய இடத்துக்கு போய்ச் சேருவோம்.
* நன்மையும், தீமையும் உடலை மாறி மாறி வசப்படுத்தினாலும், இறுதியில் நல்லவை மட்டுமே நம்மை ஆள வேண்டும்.
* மேகங்கள் கலையும் வரை பொறுத்திருந்தால் தான் சூரிய ஒளியைப் பார்க்க இயலும், அதுபோல் அறியாமை அகலும் வரையில் பொறுமையாகப் பிரார்த்தனை செய்தால் தான் இறையருள் கிடைக்கும்.
* அன்பு வழியில் பக்தி செலுத்தினால் குழப்பம் அனைத்தும் மறைந்துவிடும்.
* நல்ல விஷயங்கள் விலைமதிப்பற்றவை. அது எண்ணிக்கையில் குறைவாகத் தான் இருக்கும். அவற்றை வாங்குவோருக்குத் தான் தகுதி வேண்டும்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement