உண்மையே வெற்றி தரும்
ஜூலை 12,2011,
10:07  IST
எழுத்தின் அளவு:

* ஒவ்வொரு வஸ்துவுக்கும் ஒரு திறவு கோல் இருக்கிறது! ஏழைகளை நேசிப்பது சொர்க்கத்தின் திறவு கோலாகும்.
* வறுமை எனக்கு பெருமை தரக்கூடியதே! மனிதரிடம் வறுமை சிறுமையாக இருக்கலாம். கியாமநாளில் வறுமை இறைவனிடம் அலங்காரமாக இருக்கும். உங்கள் வீட்டில் சிலந்திப் பூச்சிகளை அகற்றி சுத்தம் செய்யுங்கள். அதனை வீட்டில் வைத்திருந்தால் அது உங்கள் வாழ்க்கையில் வறுமையை இழுத்து வரும்.
* உலகம் விசுவாசிகளுக்கு சிறைச்சாலையாகவும், அவிசுவாசிகளுக்கு சுவர்க்கபதியாகவும் இருக்கின்றது.
* நீர் என்னை நெருங்க முற்படுவீராயின் ஏழ்மையான வாழ்வை கடைப்பிடிப்பீராக. மேலும், செல்வந்தருடன் கூடி இருக்கும் போது கவனமுடன் இருப்பீராக!
* நீங்கள் உண்மை பேசுங்கள், அது முதலில் அழிவைத் தந்தாலும் முடிவில் வெற்றியைத் தரும்.
* உண்மை விசுவாசியான ஒரு ஏழை அடியான் மீது, இறைவன் நேசம் காட்டுகிறான்.
-வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement