தெய்வ அருள் கிடைப்பது எப்படி?
ஜூலை 12,2011,
10:07  IST
எழுத்தின் அளவு:

* இதயத்தில் சுத்தமான, பயமற்ற, கபடமற்ற, குற்றமற்ற, பகைமையற்ற எண்ணங்களை நிறுத்திக் கொண்டால், உடம்பில் தெய்வத்தன்மை விளங்கும்.
* துணிவு, உள்ளத்தூய்மை, லட்சியத்தில் ஈடுபாடு, லாப நஷ்டங்களில் சிந்தனைஇல்லாமல் இருப்பதுவே யோகத்தின் ரகசியம்.
* ஒவ்வொருவரும் தன் கடமையைச் செய்ய வேண்டியது அவசியம். அவற்றுள் பிறந்த நாட்டுக்கு உழைப்பதை முதன்மையான கடமையாகக் கொள்வதே அனைத்திலும் முக்கியமாகும்.
* கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி, கும்பிடாவிட்டாலும் சரி...பிறரை ஏமாற்றுவதை நிறுத்திவிட்டு, நல்லதைச் செய்தால் தான் தெய்வம் அருள் புரியும்.
* தாய் நம் உடலை வளர்க்கிறாள். தாய்மொழி உயிரை வளர்க்கிறது. உயிரை வளர்க்கும் உயர்வு இருப்பதால் தான் அதைத் தாய்மொழி என்கிறோம்.
* அறிவுத்தெளிவைத் தவறவிடாதே. ஓயாமல் தொழில் செய்து கொண்டிருந்தால் நீ எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும்.
- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement