இது ஊறுகாய் அல்ல!
ஆகஸ்ட் 09,2008,
11:25  IST
எழுத்தின் அளவு:

* ஆசையின்றி நமது முயற்சிகளில் ஈடுபடுவது, மனத்தூய்மையுடன் இருப்பது, அகந்தையை அடியோடு விடுவது, சமுதாய சேவை செய்வது, இன்ப துன்பங்களை சமமாக பாவிப்பது, சென்றதைப் பற்றிக் கவலைப் படாமல் இருப்பது, சுயநலப் போக்கினை கைவிடுவது, எச்செயல் செய்தாலும் தெய்வார்ப்பணமாகவே செய்வது ஆகியவை பகவானுக்குப் பிரியமானவை.
* நீராடல், நல்ல தூய்மையான உடையை உடுத்துதல், நல்ல உணவு, அமைதியான சூழல் இவையெல்லாம் மனிதனுக்கு வேண்டிய புறத்தூய்மையை தரவல்லன. ஆனால், மனதில் நல்ல எண்ணங்களைச் சிந்திப்பதால் மட்டுமே அகத்தூய்மையைப் பெற முடியும்.
* பக்தி என்பது வாழ்க்கையில் உணவுடன் தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் அல்ல. அது, சத்து நிறைந்த உணவு. இறைநாமங்களை விடாது ஜபித்து வாருங்கள். மனதில் எழும் ஆசையைத் தூண்டும் தீய எண்ணங்கள் நம்மை விட்டு நீங்கி விடும்.
* செல்வமும், ஆடம்பர வசதிகளும் நிலையில்லாதவை. வந்த வேகத்தில் காணாமல் ஓடி விடும். அவற்றை மட்டுமே தேடியலைந்து பயனுள்ள மனிதப்பிறவியை வீணடித்து விடக் கூடாது. நம்மிடம் பணவசதி இருந்தால் அதை மற்றவர்களுக்கு இயன்றளவு கொடுத்து உதவும் சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement