பெயரில் மட்டும் ராமனா?
ஜூலை 20,2011,
16:07  IST
எழுத்தின் அளவு:

* சிந்தனை சக்தி மட்டும் போதாது, மனத்தைப் பக்குவப்படுத்திப் பண்படுத்த தெரிய வேண்டும். அப்போது தான் இறைவனைக் காண முடியும்.
* உண்மையை பேசுவதுடன் தர்மத்தின்படி நடந்தால் வாழ்க்கையில் முழுப் பலன்களையும் அடைய முடியும். நம்முடைய மனம், சொல், உடம்பு இவை அனைத்தும் தர்மத்தில் ஈடுபடுவதே உண்மையான சேவையாகும்.
* பகவானை சிரமப்பட்டுத் தேடி அலைய வேண்டியதில்லை. அவர் எங்கும் இருக்கிறார். அவர் அனைவரிடமும் இருக்கிறார். அனைவரிடத்திலும் இறைவனைப் பாருங்கள், அனைவரையும் நேசியுங்கள். அதுவே பக்தி மார்க்கமாகும்.
* பெயர்களுக்கென தனி மரியாதை இருக்கிறது. ராமன் என்று பெயர் வைத்தால் போதாது. தந்தையிடம் மரியாதையுடன் இருக்க வேண்டும், சீதா என்று பெயரை வைத்துக் கொண்டு விவாகரத்து பெற முன்வரக் கூடாது. லட்சுமணன் என்று பெயர் வைத்துக் கொண்டு அண்ணனிடம் சண்டை போடக்கூடாது. பெயருக்கு ஏற்ற பண்பையும் நடத்தையையும் பெற வேண்டும்.
-சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement