தெய்வத்தன்மை பெற வழி
ஜூலை 21,2011,
14:07  IST
எழுத்தின் அளவு:

* மனிதன் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட்டு என்றும் மாறாத பேரின்பத்தை அடைய விரும்புகிறான், அதற்குரிய வழிகளையே கீதை காட்டுகிறது.
* மனிதனுக்கு மனிதன் இயற்கையில் பகை என்ற நிலையில் மூடத்தனமான மனித நாகரீகம் வளர்ந்திருக்கிறது, இதனை மாற்றி, அன்பை மூலாதாரமாக்க வேண்டும்.
* அநியாயத்தை அநியாயத்தால் எதிர்க்க வேண்டிய அவசியமில்லை, அதர்மத்தை அதர்மத்தால் தான் கொல்ல வேண்டும் என்பதும் இல்லை. அநியாயத்தை நியாயத்தாலும், அதர்மத்தை தர்மத்தாலும் ஒழியுங்கள்.
* இதயத்தில் சுத்தமான, பயமற்ற, கபடமற்ற, குற்றமற்ற, பகைமையற்ற எண்ணங்களை நிறுத்திக் கொண்டால் உடம்பில் தெய்வத்தன்மை விளங்கும்.
* கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் விழுவது போல, மனித ஜாதி நன்மையை நன்றாய் உணர்ந்தும், தீமையை உதற வலிமையின்றித் தத்தளிக்கும் நிலையை மாற்ற வேண்டும்.
* குழந்தைகளே! நீங்கள் ஓய்ந்திருக்காமல் ஓடி விளையாடுங்கள். நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள். பிற குழந்தைகளுடன் அன்புடன் இருங்கள்.
-பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement