தூக்கத்தை தவிர்த்து விடு
ஜூலை 21,2011,
14:07  IST
எழுத்தின் அளவு:

* ஞானமும் அறிவும் உனக்கு அவ்வாறே இனிமையாய் இருக்கும். அவற்றை நீ அடைந்தால் முடிவில் உனக்குப் பயன் கிடைக்கும். உன் நம்பிக்கை வீண்போகாது.
* இறைவன் மனிதருக்கு தந்துள்ள ஆவி ஒரு விளக்கு. அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் ஆய்ந்தறியும்.
* தூங்கி கொண்டேயிருப்பதை நாடாதே, கண் விழித்திரு. உனக்கு வயிறார உணவு கிடைக்கும்.
* இறை மக்களுக்கு ஏற்றவாறு, அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்யுங்கள்.
* நீங்கள் நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாகவும், தீமை என்றால் என்ன என்றே தெரியாத கபடற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
* கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள், இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு ஆகும்.
* ஒருவர் தம்மை தூய்மையாக வைத்துக் கொண்டால், அவர் எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருப்பார்.
* மனக்கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள். குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியதே.
-பைபிள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement