பேசும் முன் என்ன செய்வது?
டிசம்பர் 03,2007,
15:44  IST
எழுத்தின் அளவு:

* அடுத்தவர்களுடைய விஷயத்தில் நீ எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதை முதலில் உன் விஷயத்தில் அதை கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களுக்கு ஒரு நல்ல புத்திமதியை வழங்குவதற்கு முன்னால் அந்தப் புத்திமதியை உனக்கே நீ சொல்லிக் கொள்ள வேண்டும்.

* மற்றவர்களிடத்தில் நாம் என்ன குறையினைக் காண்கிறோமோ அதே குறை நம்மிடத்தில் இருந்தால் முதலில் அதை அகற்ற வேண்டும். அதன்பிறகு மற்றவருடைய குறையை மாற்ற முயற்சி செய்யலாம்.

* நீ பயனுள்ள விதத்தில் பத்து நிமிஷம் பேச வேண்டுமென்றால், பத்து நாளுக்கு மவுனத்தை கடைபிடிக்க வேண்டும். நீ பயனுள்ள விதத்தில் ஒரு நாள் செயலாற்ற வேண்டுமென்றால் ஒரு வருடத்துக்கு அமைதியாக இருக்க வேண்டும்.

* நீ என்ன செய்தாலும், எந்த வழிமுறையைப் பயன்படுத்தினாலும், அந்த வழிமுறையில் பெரும் ஆற்றலையும் திறனையும் அடைந்து விட்டாலும் கூட, அதன் விளைவுகளை நீ இறைவனின் கரங்களில் ஒப்படைக்க வேண்டும். நீ முயற்சி செய்யலாம். ஆனால், முயற்சியின் பலனை உனக்கு கொடுப்பதா வேண்டாமா என்பது இறைவனின் கையில்தான் உள்ளது.

* நீ அனைத்தையும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அவை இறைவனிடமிருந்து வருபவையாக மட்டுமே இருக்க வேண்டும். மனதை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் இறைவனுடன் ஒன்றிப்பதற்கும், தொடர்பு கொள்ளுவதற்கும் இன்றியமையாத நிபந்தனை.

Advertisement
ஸ்ரீ அன்னை ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement