பெற்றோர், ஆசிரியர் கடமை
ஆகஸ்ட் 09,2008,
16:47  IST
எழுத்தின் அளவு:

உடல் பஞ்சபூதங்களால் ஆனது. இன்றோ, நாளையோ நிச்சயம் அழியப் போகிறது. ஆனால், உடலுக்குள் இருக்கும் ஆத்மா என்றும் நிலையானதாக இருக்கிறது. ஆகவே, ஆன்மாவின் மீது மட்டும் விருப்பம் கொள்ளுங் கள். அதைவிடுத்து உடல் மீது ஆசைப்படுவது எந்த பயனையும் தராது. மனிதன் தனது நேரத்தை உண்பதிலும், உறங்குவதிலும் மற்றும் விலங்குகள், பறவைகள் போல புணர்வதிலும் கழித்து வருவது சரியானதா என எவரும் அறிந்து கொண்டதாக தெரியவில்லை. இறைவனது சிந்தனையிலேயே, வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும் புனிதமாக்கிக் கொள்ள வேண்டும். இதையே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். நம்பிக்கை உள்ளவன் மனிதன். நம்பிக்கை இல்லாவிட்டால் ஒருகணம் கூட நம்மால் உயிர்வாழ முடியாது. செயல் எதுவானாலும் நம்பிக்கையோடு செய்தால்தான் அதில் முழு வெற்றி பெற இயலும். கடவுள் இருக்கிறார் என்ற முழு நம்பிக்கையோடு வழிபாடு செய்பவன் இறைவனை நிச்சயம் அடைவான். இன்றைய ஆசிரியர்கள், புத்தகத்தில் டுக்கப்பட்டிருப்பவைகளையே மாணவர்களுக்கு எடுத்துக்கூறுகின்றனர். மாணவர்களுக்கும் அத்தகைய அறிவில்தான் நாட்டம் உள்ளது. ஆசிரியர்கள் பள்ளிப்பாடங்களுடன் புனிதமான விஷயங்களையும் மாணவர்களுக்கு போதிக்க வேண்டும்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement