வேலை வணங்குவதே வேலை!
ஆகஸ்ட் 09,2008,
16:50  IST
எழுத்தின் அளவு:

தோகைமயிலில் உலவிடும் கந்தனின் திருக்கரத்தில் வேல் திகழும். இவ்வேல் எப்போதும் வெற்றிவாகையைச் சுமக்கும் சிறப்புமிக்கதாகும். அவ்வேலினை வணங்குவதே எமக்கு வேலையாகும். பச்சைமயிலில் ஏறிவரும் வீரன் முருகன். அவன் அலங்காரமாய் வீற்றிருக்கும் குமரன். பன்னிரு வலிமையான தோள்களைக் கொண் டவன். அடைவதற்கு அரியவன். ஆனால், உயர்ந்த தமிழைத் தரும் அடியவர்கள் அவனை எளிதில் அடைந்து விடுவர்.வீரத்திருவிழிப்பார்வையும், வெற்றி வேலும், மயிலும் என் முன்னே நின்று எந்த நேரத்திலும் என்னைக் காக்கும் தன்மை உடையது.அன்னை பராசக்தியின் குளிர்ச்சி பொருந்திய திருவருளினைப் பெற்ற கந்தப் பெருமானையே என் உள்ளம் எப்போது நாடுகின்றது. அவனது திருவருளுக் காக ஏங்குகிறது. தீய அசுரர்களைக் கொன்று இந்திரன் மகள் தெய்வானை யை மணந்தவன். வேதங்களின் பொருளாகத் திகழும் முருக பெருமானே உலகில் தர்மத்தை நிலைநாட்டுகின்றான். வேடர்குலப் பெண்ணாம் வள்ளியை மணக்க, தவவேடம் புனைந்து திரிந்தான். முருகப்பெருமானின் அருளால் தமிழ்நாட்டிற்குத் தனிப்புகழ் உண்டு. முருகா! நீ குருவாக வீற்றிருக்கும் குருமலையான சுவாமிமலை வந்து உனக்கு சேவை செய்வேன்.

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement