அமைதியே நல்ல பழக்கம்
ஜூலை 25,2011,
09:07  IST
எழுத்தின் அளவு:

* செய்யப்போவதையே சொல்லுங்கள், சொன்னபடி செயல்படுங்கள், அன்புடன் செயல்படுங்கள்.
* புத்தக அறிவு மட்டும் பயன் தராது. ஆழ்ந்த பயன் தரக் கூடிய அறிவைத் தேடுங்கள். அதைக் கொண்டு புத்தியை வளப்படுத்திக் கொள்ளுங்கள்.
* நமக்குக் கிடைப்பதைப் பிறருக்கும் கொடுக்கப் பழக வேண்டும். பிறருக்குக் கொடுக்கவே பகவான் கொடுத்திருக்கிறார் என்பதை உணர வேண்டும். தியாக உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* கடமையைக் கருத்துடன் செய்வது மனிதரின் பொறுப்பு. அதற்குப் பலன் அருள்வது இறைவனின் பொறுப்பு.
* அனைத்து ஆசைகளையும் இறைவனிடமே அர்ப்பணித்து விடுங்கள், மனதைச் சமநிலையில் வைக்க அமைதியைத் தரும் பழக்கங்களை மேற்கொள்ளுங்கள், யாராவது உங்களைத் திட்டவோ, அடிக்கவோ வரும் போது புன்னகையுடன் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
* அன்பே கடவுள், அன்புள்ள இடத்தில் கடவுள் இருக்கிறார். மக்களை நேசியுங்கள். அன்பை, சேவை செய்யும் ஆர்வமாக மாற்றிக் கொள்ளுங்கள், சேவையில் இறைவனுக்குச் செய்யும் பூஜையைக் காணுங்கள்.
-சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement