பிறர் செயலை குறை கூறாதே!
ஜூலை 25,2011,
09:07  IST
எழுத்தின் அளவு:

* புராணங்களைக் கேட்டுப் பயனடைந்து கொள்ளலாம். ஆனால், புராணங்களை வேதங்களாக நினைத்து அறியாமையாக பேசி விலங்குகள் போல் நடந்து கொள்ளக்கூடாது.
* தனக்கும் பிறருக்கும் துன்பம் விளைவிக்க வைக்கும் செயல் பாவமாகும். தனக்கும் பிறர்க்கும் இன்பம் விளைவிப்பதே புண்ணியச் செயல்.
* பயத்தை வென்றால் பிற பாவங்களை வெல்லுதல் எளிதாய்விடும். மற்ற பாவங்களை வென்றால், "தாய் பாவமாகிய' பயத்தை வெல்லுதல் எளிதாகிவிடும்.
* தவத்தில் சிறந்தது பூஜை. மனதைத் தீய வழியில் செல்லவிடாமல் தடுக்க மிகவும் எளிதான வழி, நல்ல விஷயங்களில் ஈடுபடுதல் ஆகும். மனதைச் செலுத்துவதற்குரிய நன்னெறிகள் அனைத்திலும் உயர்ந்தது பூஜை.
* சுகமாக வாழ்பவனைக் கண்டு நீ பொறாமைப்படாமல் அவனிடம் நட்பு செலுத்த வேண்டும். அதேபோல் நாம் ஒரு செயலை செய்யாமலிருந்து கொண்டு< அதை பிறர் செய்யும் போது அந்த செயலை குறை கூறுவதும் தவறாகும்.
* பொறுமையுடன் இருப்பவன் உலகத்தில் நடக்கும் செயல்கள் அனைத்திலும் வெற்றிகாண்பான்.
-பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement